இமாசல பிரதேசத்தில் திபத் புத்தமத தலைவர் தலாய்லாமா இளைஞர்களுக்கு பல்வேறு போதனைகளை கற்பித்தார்.

233

இமாசல பிரதேசத்தில் திபத் புத்தமத தலைவர் தலாய்லாமா இளைஞர்களுக்கு பல்வேறு போதனைகளை கற்பித்தார்.
திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி சீனா உரிமை கொண்டாடி வருகிறது. திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து கடந்த 1959-ஆம் ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து விட்டார்.இந்நிலையில் ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா பங்கேற்ற போதனை நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு பல்வேறு விதமான போதனைகள் கற்பிக்கப்பட்டது. இதில் வெளிநாட்டவர்கள், புத்த மத துறவிகள்,உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்