குஜராத்தின் முதல் பெண் டிஜிபியாக கீதா ஜோரி நியமனம்

416

குஜராத் மாநிலத்தின் முதல் பெண் காவல்துறை தலைமை இயக்குனராக கீதா ஜோரி நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநில காவல்துறை தலைமை இயக்குராக பி.பி. பாண்டே பதவி வகித்து வந்தார். இவர் மீது உச்சநீதிமன்றத்தில் என்கவுன்டர் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்தநிலையில், புதிய தலைமை இயக்குராக கீதா ஜோரி நியமிக்கப்பட்டுள்ளார். 1982 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பிரிவை சேர்ந்த கீதா ஜோரி, தற்போது குஜராத் மாநில போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷனில், நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் 2005-ல் சொராபுதீன் மீதான வழக்கு மற்றும் துள்சிராம் பிரஜாபதி என்கவுன்டர் வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.