மூன்று மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

355

மூன்று மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டசபை பதவிகாலம் முறையே மார்ச் 6, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நிறைவடைகிறது. இதனால் மூன்று மாநிலங்களுக்கும் தலைமை தேர்தல் துணை ஆணையர் சுதீப் ஜெயின், சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திரிபுராவில் இடது சாரி கட்சிகளின் ஆட்சியும், மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சியும் நடக்கிறது. நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி- பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த மூன்று மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.