வங்கமொழியை மேம்படுத்துவதே நோக்கம் – மம்தா பானர்ஜி சூளுரை

112

வங்க மொழியை மேம்படுத்துவதே தனது நோக்கம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். மேற்குவங்கத்தில் பாஜக-திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், வடக்கு பார்கானா நகரில் கட்சி தொண்டர்கள் மத்தியில் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வங்க மொழியை மேம்படுத்துவதே தனது நோக்கம் என தெரிவித்தார். மேலும் பீகார், பஞ்சாப் மாநிலங்களுக்கு செல்லும் போது அம்மாநில மக்கள், அவர்களது தாய்மொழியை பேசுவது போல், மேற்கு வங்கத்திலும் வங்க மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மம்தா அறிவுறுத்தினார்.