தொண்டைக்குழியில் உணவு சிக்கியதால் குழந்தை பரிதாப சாவு! பிறந்தநாளில் ஏற்பட்ட சோகம்!!

425

ஐதராபாத்,ஆக.2–
தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தொண்டைக்குழியில் உணவு சிக்கியதால் ஒரு வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், காச்சிராஜீ கூடம் பகுதியைச் சேர்ந்தவர் கோவர்தன். இவரது மனைவி சுனிதா. இந்த தம்பதியினரின் 2–வது மகன் சந்தீப் (1) குழந்தைக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது.
மூச்சடைப்பு
இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் வந்தது. அன்று தாய் சுனிதா, குழந்தையை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து உணவு ஊட்டி உள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக குழந்தையின் தொண்டை குழியில் உணவு சிக்கிக் கொண்டது. இதனால் குழந்தைகக்கு மூச்சடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சந்தீப்பின் பிறந்த தினமே நினைவு தினமாகிவிட்டதே எனக்கூறி பெற்றோரும், உறவினர்களும் கதறிஅழுதனர்.