காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை : மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு.

251

காவிரி நீர் பிடிப்புகளில் பெய்துவரும் தொடர் மழையால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளின் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி, தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கர்நாடகா காவிரியில் திறக்கப்பட்ட உபரி நீர், மழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, 20புள்ளி 9ஆக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், 23 புள்ளி 15ஆக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம், 3 அடி உயர்ந்து காணப்படுகிறது. மேட்டுர் அணையில் இருந்து வினாடிக்கு 500கனஅடி தண்ணீர் தற்போது வெளியேற்றப்படுகிறது.