மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சி – அமைச்சர் தங்கமணி

149

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் கூறி வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சாரத்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொய் புகார்களை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்து வருவதாகக் கூறினார். முதலில் உண்மை தன்மை அறிந்து எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், ஆளுங்கட்சி மீது குற்றம் சாட்ட வேண்டும் என்று கூறிய அமைச்சர் தங்கமணி, மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தவே, இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை ஸ்டாலின் கூறி வருவதாக தெரிவித்தார். தொடர்ச்சியாக, இது போன்ற புகார்களை முன்வைத்தால், நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறுவழியில்லை என்றும் அவர் கூறினார்.