தினகரனுக்கு அமைச்சர் அந்தஸ்தில் அரசு பதவி அளிக்க திட்டம் !

810

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமைச்சர் அந்தஸ்தில் அரசுப்பதவி அளித்து, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூர் மத்திய சிறையில் உள்ளநிலையில், துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில், சசிகலாவை தமிழக அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செல்லூர் ராஜூ ஆகியோர் சந்தித்து பேசியபோது, முக்கிய கருத்து பரிமாற்றம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கட்சி தொடர்பாகவும், ஆட்சி தொடர்பாகவும் சசிகலா தெரிவித்த யோசனைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமலாக்கப்படும் என்று உறுதியாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, டிடிவி தினகரனுக்கு அரசு சார்பு பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் அந்தஸ்தில் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தினகரன் நியமிக்கப்படுகிறார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், அமைச்சர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வசதியாகவும், மத்திய அரசுடன் நெருக்கமான தொடர்பை வளர்த்துக்கொள்ளவும் இந்த பதவி வழிவகுக்கும் என அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.