10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்….

270

திடீர் தாலுக்கா மாற்றத்திற்கு 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் ஓட்டப்பிடாரம் தாலுக்காவில் இருந்து சில கிராமங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கயத்தாறு தாலுக்காவில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் தாலுக்கா மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், கோவில்பட்டி-சங்கரன்கோவில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அருகே இருக்கும் கோவில்பட்டி தாலுக்காவில் இருந்து தங்கள் கிராமங்களை நீக்கி, அதிக தூரம் உள்ள கயத்தாறு தாலுக்காவில் இணைத்த முடிவை, அரசு திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.