நெல்லை மாவட்டம் திசையன்விளை தபால் நிலையத்தில் உள்ள ரெயில்வே முன்பதிவு மையத்தை மூட உத்தரவிட்ட மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

270

நெல்லை மாவட்டம் திசையன்விளை தபால் நிலையத்தில் உள்ள ரெயில்வே முன்பதிவு மையத்தை மூட உத்தரவிட்ட மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட திசையன்விளை தபால் நிலையத்தில் ரெயில்வே முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது. இப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த இந்த மையத்தை மூட தற்போது ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதனைக் கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.