திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி…!

358

திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. விளமல், புலிவலம், கிடாரங்கொண்டான், நன்னிலம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதே போல் சென்னை, திருச்சி, மதுரை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.