போக்குவரத்து சேவைகள் பாதிப்பு : 3 நாட்களாக மின் வினியோகம் நிறுத்தம்

101

திருவாரூர் மாவட்டத்தில், தொடர்ந்து நடைபெற்று வரும் புயல் சேத சீரமைப்புப் பணிகளில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் சேதப் பகுதிகளில் மீட்பு மற்றும் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிராமப் புறங்களில் நிலைமை சீரடையாததால், போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படடுள்ளன. திருத்துறைப் பூண்டி, முத்துப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 நாட்களாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் போர்கால அடிப்படையில், சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சேலத்தில் இருந்து முதலமைச்சர் அனுப்பி வைத்த உணவுப் பொருட்கள், போர்வைகளை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அமைச்சர் காமராஜ் வழங்கினார். அப்பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் முடிவடையாத நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.