மணக்கோலத்தில் புதுமண தம்பதிகள் வாக்குப்பதிவு

220

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணக்கோலத்தில் வந்த மணக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சக்திவேல், காயத்ரி ஆகிய இருவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதியர்கள் செம்பூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மணக்கோலத்தில் சென்று வாக்குப்பதிவு செய்தனர். இதேபோல், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விக்னேஷ்வரன் மற்றும் மஞ்சு இருவருக்கும் இன்று காலை திருமணம் நடந்தது. இதனையடுத்து இருவரும் மணக்கோலத்தில் சென்று வாக்குப்பதிவு செய்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.