thiruvanmiyur murder

திருவான்மியூர் அருகே ரியல் எஸ்டேட் பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவர் திருவான்மியூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் கலியமூர்த்தி காணாமல் போனதாக, மனைவி ஹேமா மற்றும் நண்பர் ஒருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் கலியமூர்த்தியின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், நண்பர்கள் அவரை அடித்து கொலை செய்து செய்யூர் அருகே உடலை புதைத்து தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக மூன்று பேரை கைது செய்த போலீசார், உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.