திருவண்ணாமலை அண்ணாமலையர் கோவில் அன்னதான உண்டியலில், 500 மற்றும் 1000 ரூபாய் செல்லா நோட்டுகளாக பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

276

திருவண்ணாமலை அண்ணாமலை கோவிலில் தினமும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வரும்நிலையில், அங்கு வரும் பக்தர்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை காணிக்கையாக உண்டியலில் செலுத்துவதுண்டு. கோவில் அன்னதான உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றபோது, அதில் பத்தொன்பது 500 ரூபாய் நோட்டுகளும், எட்டு 1000 ரூபாய் நோட்டுகளும் கிடைத்தன. இதன் மதிப்பு 17 லட்சத்து 50 ஆயிரமாகும். மேலும், அன்னதான உண்டியலில் 5 கிலோ வெள்ளிக்கட்டிகளும் இருந்தது. கடந்த 8ஆம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை தொடர்ந்து, கணக்கு காட்டப்படாத கருப்பு பணம் உண்டியலில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுவரை உண்டியலில் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம்வரை மட்டுமே காணிக்கையாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.