பொன்னேரியில் அரசு பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் இலவச சைக்கிள்கள் எரிந்து சேதமடைந்தன.

215

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு பள்ளியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் மாணவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டு இருந்த 10 லட்சம் மதிப்பிலான 540 விலையில்லா சைக்கிள்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து தொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.