ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு..!

283

பள்ளிப்பட்டு அருகே ஆங்கில ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய பாசப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியகரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பகவான். மாணவர்களின் நன்மதிப்பை பெற்ற இவர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை அறிந்த மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளி வாசலில் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பணி மாறுதல் கடிதத்தை பெற வந்த ஆசிரியர் பகவானை சூழ்ந்து கொண்ட மாணவர்கள், வேறு பள்ளிக்கு செல்லக் கூடாது எனக் கூறி, அவரை ஆரத்தழுவி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். மாணவர்கள், பெற்றோர்களின் போராட்டத்திற்கு பணிந்த மாவட்ட நிர்வாகம் ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதல் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.