திருவள்ளூரில் நடைபெற்ற விவசாயிகளின் குறைதீர் கூட்டத்தில் கரும்புகளுடன் விவசாயிகள் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

153

திருவள்ளூரில், மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் திருத்தணி, பொன்னேரி, பூவிருந்தவல்லி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது கரும்புகளுடன் பங்கேற்ற விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில்
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 2 ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.