திருவள்ளூர் அருகே தனியார் பள்ளி மாணவர்கள் மண்பானையில் சமத்துவ பொங்கலிட்டு சிறப்பாக கொண்டாடினர்.

121

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளி மாணவர்கள் மண்பானையில் சமத்துவ பொங்கலிட்டு சிறப்பாக கொண்டாடினர்.
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையை அடுத்த பெருவாயல் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழர் திருநாளாம் தை பொங்கலை வரவேற்கும் விதமாக, பாரம்பரிய உடை அடைந்த பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து மண்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து, கோலாட்டம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பள்ளி தலைவர் கோவிந்தராஜன், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், ஏராளமான மாணவ மாணவிகள் உட்பட பெற்றோர்களும் கலந்துகொண்டு பொங்கலை கொண்டாடினர்.