2000 நிறுவனங்கள் மூடப்பட்டதால் ரூ.50 கோடி வரையிலான வர்த்தகம் பாதிப்பு..!

358

முழு அடைப்பு காரணமாக திருப்பூரில் உள்ள 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 2000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 50 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள பாத்திர தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் 7 டன் மதிப்பிலான எவர்சில்வர், செம்பு, பித்தளை பாத்திரங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்து. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.