70 வயதான மூதாட்டி மர்ம மரணம் | இளைய மகள் அடித்துள்ளதாக தகவல்

146

பல்லடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டி குறித்து விசாரணை நடத்த வேண்டுமென உறவினர்கள் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த 70 வயதான மயிலாத்தாளுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக தனது இளைய மகள் சரஸ்வதி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் சரஸ்வதி தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மூத்த மகள் ரத்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, சொத்துக்காக தாயை பெற்ற மகளே அடித்துள்ளதாகவும், அதற்கு காரணமான காயங்கள் உடலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, இது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.