திருப்பத்தூர் அருகே வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பஞ்சணம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கே நேற்று பணி முடிந்து ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர். ருத்ரா என்ற பெண் ஊழியர் மட்டும் பணியில் இருந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பெண் ஊழியர் ருத்ரா காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.