திருப்பதி அருகே புதரில் பதுக்கியிருந்த செம்மரங்கள் பறிமுதல்

317

திருப்பதி அருகே புதருக்குள் மறைத்து வைத்திருந்த செம்மரங்களைப் பறிமுதல் செய்த போலீசார் அவற்றைக் கடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரம் பகுதியில் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சந்தேகப்படும்படி சென்ற மர்மநபர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பியோடினர். விசாரணையில் தப்பியோடியவர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12க்கும் மேற்பட்ட செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர். இதேபோல் ரேணிகுண்டா பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.