குடும்பத்துடன் ஏழுமலையானை இன்று தரிசனம் செய்கிறார் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

1123

ஏழுமலையானை தரிசனம் செய்ய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பதி கோயிலுக்கு செல்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சேலம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தபடி, ஏற்காடு கோடை விழா, மலர்க்காட்சி துவக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நேற்று காலையில் சேலத்தில் ஏவிஆர் ரவுண்டானா மேம்பாலத்தை துவக்கி வைத்தார். பின்னர் ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்கு வந்து தங்கினார். இதனையடுத்து, இன்று காலை கார் மூலம் புறப்பட்டு, திருப்பதி சென்று குடும்பத்துடன் தரிசனம் செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பின்னர் சென்னை செல்வார் என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.