திருப்பதியில் செம்மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..!

194

திருப்பதியில் செம்மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருமலை ஏழுமலையான் கோவிலில் ஆந்திரா மாநில வனத்துறை அமைச்சர் சித்தா ராகவராவ் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, திருப்பதி தேவஸ்தானத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செம்மரங்களை பாதுகாக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். வனப்பகுதியில் செம்மரங்கள் பாதுகாக்கப்படுவதே அரசின் நோக்கம் என்று கூறிய அவர், செம்மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.