ஒரு நபர் மாதம் ஒரு முறை மட்டுமே அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி – திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

144

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் மாதம் ஒரு முறை மட்டுமே அங்கப்பிரதட்சணம் செய்ய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலை கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த அங்கப்பிரதட்சணம் செய்து வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் வாரம் ஒரு முறை அங்கப்பிரதட்சணம் செய்து வருவதால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், பக்தர்கள் மாதம் ஒரு முறை மட்டுமே அங்கப்பிரதட்சணம் செய்ய வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாடு விதித்துள்ளது.