திருப்பதி ஏழுமலையான் கோயில் மகா கும்பாபிஷேகம் ஆகஸ்ட் மாதம் 16ஆம் நடைபெறுகிறது..!

209

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

12 ஆண்டுகளுக்கு பின்னர், ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆகஸ்டு 11-ஆம் தேதி முதல், யாக சாலை பூஜைகள் நடைபெறுகின்றன. கோயிலில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த பூஜைகள் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, ஆகஸ்டு மாதம் 12-ஆம் தேதி முதல் 16-ந் தேதி வரை மூலவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனமும் ரத்து செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.