செம்மரக்கட்டைகள் கடத்திய 2 தமிழர்கள் கைது : செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை

244

திருப்பதி அருகே 19 செம்மரக்கட்டைகளை கடத்தி சென்ற 2 தமிழர்களை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்துள்ள ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி வாகனங்களில் ஏற்றிகொண்டிருந்தது. இதனை கண்ட அதிகாரிகள் கடத்தல் கும்பலை பிடிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட கடத்தல் கும்பல் அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பியோடியது. அப்போது தமிழகத்தை சேர்ந்த தங்கராஜ், முருகன் ஆகிய இருவரை பிடித்து கைது செய்த அதிகாரிகள் அவர்களிடமிருந்த 19 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.