குடிபோதையில் தூக்கில் தொங்கபோவதாக நடித்த இளைஞர் உயிரிழப்பு

400

திருப்பதி அருகே குடிபோதையில் தூக்கில் தொங்கப்போவதாக நடித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில்ம் திருப்பதி அருகே உள்ள திருச்சானூரில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் சிவக்குமார். இவர் வழக்கம்போல் நேற்றுபணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். குடிபோதையில் இருந்த சிவக்குமார், பொழுதுபோக்கிற்காக தனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு வீடியோ கால் செய்துவிட்டு, தான் தூக்கில் தொங்கவிருப்பதாகவும் அதனை லைவாக பார்க்க போனில் காத்திருக்கும்படியும் கூறியிருக்கிறார். வீடியோகாலில் இருந்த சிவகுமாரின் நண்பர் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை.

அப்போது, ஸ்டூலில் இருந்த அவரின் கால் தவறியபோது, சேலை அவரது கழுத்தை இறுக்கியது. இதனால், மூச்சு விடமுடியாமல் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.