ராம நவமியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம்

109

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராமன், சீத்தா, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

ராம நவமியை முன்னிட்டு, திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து, அங்குள்ள ரங்கநாதர் மண்டபத்தில் ராமன், சீத்தா, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அவர்களுக்கு பால், தேன், தயிர் போன்ற திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.