திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : 8-ஆம் நாளான இன்று திருத்தேரோட்டம் நிகழ்ச்சி

613

திருப்பதியில் பிரம்மோற்சவத்தையொட்டி, நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் விழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இந்த பிரம்மோற்சவ விழாவில் கடந்த ஏழு நாட்களாக மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். இந்நிலையில், இவ்விழாவின் எட்டாம் நாளான இன்று திருத்தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருத்தேரில் எழுந்தருளிய மலையப்பசுவாமிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.