திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா..!

266

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. விழாவையொட்டி முன்னதாக சிறப்பு யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் ஆலயத்தில் உள்ள கொடி மரம் சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து விமான கலசங்களுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு உற்சவர் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் வலம் வருவார். இதன் பின் இரவு பூஜை நடத்தப்பட்டடு மலையப்ப சுவாமி பெரிய மாட வீதிகளில் உலா வருவார்.நள்ளிரவு 1 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.