ஏழுமலையானை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!

302

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகளவு வருவதால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை 81 ஆயிரத்து 247 பேர் தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் வைகுண்டம் வளாகத்தில் உள்ள அறைகள் பக்தர்களால் நிரம்பின.

இதனிடையே, இலவச தரிசனத்தில் பக்தர்கள் 14 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள், நடைபாதை வழியாக வந்து சர்வ தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் ஆதார் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவரும் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.