தேவஸ்தான முறைகேடு குறித்து தலைமை அர்ச்சகர் விளக்கம்…!

511

தேவஸ்தான முறைகேடு குறித்த சிபிஐ விசாரணைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள திருப்பதி தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு, அதற்கு தேவஸ்தான நிர்வாகம் முன் வருமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தேவஸ்தான முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், தன்மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுவதாக கூறினார். விசாரணை ஆணையம் அல்லது சிபிஐ விசாரணைக்கு தான் தயார் என்று தெரிவித்த ரமண தீட்சதலு, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் விசாரணையை எதிர்கொள்ளுமா என்று வினவினார். திருமலையில் குடமுழுக்கு விழாவுக்காக பக்தர்கள் தரிசனம் தடை செய்யப்படுவது வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.