ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்..!

170

திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பதியில் உள்ள பூபால் காலனியில், செம்மரக் கடத்தல் நடப்பதாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ஆந்திர போலீசார், அவ்வழியாக வந்த லாரியை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது லாரியில் செம்மரக் கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 140 செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 100-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.