புத்தாண்டையொட்டி, அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – திருப்பதி..!

121

திருப்பதி திருமலையில் புத்தாண்டையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

2019 ஆங்கில புத்தாண்டை வரவேற்க, வண்ணமலர் அலங்காரத்துடன் திருப்பதி கோவில் அழகாக காட்சியளிக்கிறது. இரவு பகலாக, தேவஸ்தான ஊழியர்களால் அலங்கார வளைவுகள், பெருமாள் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஆலயத்திற்கு உள்ளேயும் முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களை கவர்ந்திழுக்கும் விதமாக, பூலோக வைகுண்டம் போல, மின் அலங்காரங்கள், மலர் தோரணங்கள் என திருப்பதி திருமலை ரம்மியமாக காட்சியளிக்கிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், ஆலயத்தின் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் விடியவிடிய காத்திருந்து, இன்று அதிகாலை முதல் பெருமாளை தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்தநிலையில், திருப்பதி கோவில் முன்பாக, நள்ளிரவு 12 மணிக்கு பக்தர்கள் சிலர் சேர்ந்து, 2019 ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கேக் வெட்டியும், பலூன்களை பறக்க விட்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.