86 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்து போலீஸ் அதிரடி..!

263

திருப்பதி அருகே செம்மரம் கடத்திய 4 நபர்களை கைது செய்த ஆந்திர போலீஸார், அவர்களிடம் இருந்து 40 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

திருப்பதி அடுத்த மாமண்டூர் அருகே அமைந்துள்ள பி.சி. காலனியில் வாகன சோதனையில் ஈடுபட்ட ஆந்திர போலீஸார், சரக்கு லாரி ஒன்றில் செம்மரம் ஏற்றிச் சென்ற இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 21 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கர்நாடகாவைச் சேர்ந்த மேலும் இருவரை ஆந்திர போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், பெங்களுர் நியூ எலக்ட்ரிக் காலனியில் உள்ள கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 86 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர் இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் 40 லட்ச ரூபாய் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.