அதிமுக தலைமையில் வெற்றிக்கூட்டணி அமையும் – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

145

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வெற்றிக்கூட்டணி அமையும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருநாவுக்கரசர் காணும் கனவுகளுக்கெல்லாம் விடை காணமுடியாது என்று கூறினார். டிடிவி தினகரன் தனது குடும்பத்துக்குள் அதிமுகவை திணிக்க முயற்சிப்பது எந்த காலத்திலும் நடக்காது என்றும் சாடினார். விநாடிக்கு விநாடி மாறும் கமல் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்தார்.