10 வழி, 12 வழிச்சாலைகளால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை – மாநில தலைவர் திருநாவுக்கரசர்

209

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய திருநாவுக்கரசர், காங்கிரசில் உட்பூசல் இருப்பதை ஒப்புக்கொண்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் பலமாக இருந்த அதிமுக தற்போது, அதிமுக அம்மா, பாட்டி, மகள் என மூன்றாக உள்ளதாக அவர் விமர்சித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல கிராமங்களுக்கு ஒரு வழிச்சாலை கூட இல்லை என்று கூறினார். அதிமுக அரசு, முதலில் அதனை ஏற்படுத்திவிட்டு, பின்னர் 2 வழி, 3 வழிச்சாலைகள் அமைக்கட்டும் என்றும் அவர் ஆவேசமாக தெரிவித்தார். மேலும், 40 ஆயிரம், 50 ஆயிரம் கோடி செலவளித்து, பத்து வழி, 12 வழிச்சாலைகள் போடுவதால், ஒட்டுமொத்த தமிழகம் பயன் அடையாது என்றும் அவர் உறுதிபட கூறினார்.