ஆளுநர் மீண்டும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்-திருநாவுக்கரசர்!

683

ஆளுநர் மீண்டும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் எச்சரித்துள்ளனர்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பா.ஜ.க ஆளும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் ஆளுநர் ஆட்சியே நடைபெறுவதாக குறிப்பிட்டார். மத்திய பா.ஜ.க. அரசு அரசியலமைப்பை மதிக்காமல் நடப்பதாகவும், தமிழக ஆளுநர் அவரது பணியை மட்டும் கவனிக் வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் காவல்துறை அதிகாரி பெரிய பாண்டியனின் மரணம் வருத்தமளிப்பதாகவும், ஆர்.கே.நகரில் தி.மு.க வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார். ஆனால் தேர்தல் ஆணையம் தனது பணியை சரிவரச் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.