ஸ்டாலின் கருத்துக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு..!

308

காவி மயத்தை விரட்டி அடிப்போம் என ஸ்டாலின் கூறியதை வரவேற்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக காங்கிரஸ் இடையே குளறுபடி நிலவுவதாக வந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார். பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்காது என கூறினார். கருணாநிதி நினைவேந்தலுக்கு அமித்ஷா வராததால் பாஜகவுக்கு தான் நஷ்டம் என குறிப்பிட்ட அவர், காவிமயத்தை விரட்டி அடிப்போம் என ஸ்டாலின் கூறியதை காங்கிரஸ் சார்பில் வரவேற்பதாக தெரிவித்தார்.