சட்டசபையை கூட்டி முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தல்.

207

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார். தனது மகள் திருமண அழைப்பிதழை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வழங்கிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக திமுக, காங்கிரஸ் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் உறுதி அளித்ததாக கூறினார்.