அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – திருநாவுக்கரசர்

591

ஊழல் புகாரில் சிக்கி உள்ள சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு காரணமாக வருமான வரித்துறையினர் நடவடிக்கை முதற்கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். விசாரணைக்கு வழிவகுக்கும் வகையில், விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். கூட்டணி தொடர்பாக உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.