தலைமை அனுமதித்தால் தேர்தலில் போட்டியிடுவேன் !!

105

திருச்சி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிக்க உள்ளதாகவும், தலைமை அனுமதித்தால் போட்டியிட தயார் எனவும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு கூறியுள்ளார். சென்னை சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவிகளின் விருப்பத்தின் பேரிலேயே ராகுல்காந்தி கலந்துரையாடலில் கலந்துக் கொண்டதாகவும், இதில் அரசியல் , தேர்தல் குறித்து பேசவில்லை என்று கூறினார். மேலும், பிரதமர் மோடி நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் செய்தியாளர் சந்திப்பில் கூட பேசியதில்லை எனவும் விமர்சித்தார்.