பாரதிய ஜனதாவை தமிழக மக்கள் ஒருகாலும் ஏற்க மாட்டார்கள் என்று, திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

208

பாரதிய ஜனதாவை தமிழக மக்கள் ஒருகாலும் ஏற்க மாட்டார்கள் என்று, திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏழை, எளிய மக்களுக்கு கண் சிகிச்சை முகாம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக புத்தக பைகள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழக அரசியலில் குழப்பம் விளைவித்து, உள்ளே புக முனையும் பாரதிய ஜனதாவை மக்கள் ஒருநாளும் ஏற்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.