மக்களிடம் மத்திய பா.ஜ.க அரசு கொள்ளை அடிக்கிறது – திருநாவுக்கரசர்

298

சர்வதேச சந்தையில் கச்சாய் எண்ணெய் விலை குறைந்த பின்னரும் பெட்ரோலிய பொருட்கள் விலையை உயர்த்தி மக்களிடம் மத்திய பா.ஜ.க அரசு கொள்ளை அடிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக தவிர்த்து பிற கட்சிகளும், வணிகர்களும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றதாக கூறினார். எதிர்காலத்தில் மோடி அரசு விழப்போவதற்கு இந்த முழு அடைப்பு போராட்டம் அஸ்திவாரமாக அமைந்துவிட்டதாக கூறிய திருநாவுக்கரசர், சர்வதேச சந்தையில் கச்சாய் எண்ணெய் விலை குறைந்த பின்னரும் பெட்ரோலிய பொருட்கள் விலையை உயரித்தி மக்களிடம் கொள்ளை அடிப்பதாக விமர்சித்தார்..