இளம் பருவத்திலேயே அரசியல் அனுபவம் பெற்றவர் ஸ்டாலின் – திருநாவுக்கரசர்

136

திமுக தலைவராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின், கட்சியை சிறந்த முறையில் வழி நடத்துவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிகாரபூர்வ தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் அறிவிக்கப்படவுள்ளனர் என்றார். திமுக தலைவராக பொறுப்பு ஏற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்துவதாக தெரிவித்தார். இளம் பருவத்திலேயே அரசியல் அனுபவம் பெற்ற ஸ்டாலின், கட்சியை சிறந்த முறையில் வழி நடுத்துவார் என்று திருநாவுக்கரசர் உறுதிபடக் கூறினார்.