நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணியில் காங்கிரசார் தீவிரம்..!

388

காங்கிரஸ் சார்பில் தமிழக முழுவதும் நிவாரண பொருட்கள் வசூல் செய்யப்பட்டு, கேரளாவுக்கு அனுப்பப்படும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி, தென் சென்னை காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு சென்னை பாண்டி பஜார் பகுதியில் உள்ள மக்களிடம் நிவாரண பொருட்களை பெற்று கொண்டார். இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் மற்றும் அறக்கட்டளை சார்பில் நிவாரண நிதி, எம்எல்ஏ-க்களின் ஒரு மாத சம்பளம், முன்னாள் எம்.பி.-க்களின் ஒரு மாத பென்ஷன் பணம் ஆகியவை கேரளாவுக்கு நிவாரணமாக கொடுக்கப்படும் என்றார். மேலும், தமிழக முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் நிவாரண பொருட்களை திரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.