மீனவர் பிரச்சினை குறித்த மத்திய அரசின் பேச்சு வார்த்தை வெறும் கண்துடைப்பு. ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தல்.

158

மீனவர்களிடையே மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை பெரும் கண்துடைப்பு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ஜல்லிக்கட்டு நடத்த நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி உச்சநீதிமன்றத்தின் அனுமதியை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் பழுதடைந்ததை குறிப்பிட்ட அவர், அந்நாட்டு அரசுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.