தமிழகத்தில் பா.ஜ.கவின் பினாமி ஆட்சி நடைபெறுகிறது – திருநாவுக்கரசர்

95

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை காலம் தாழ்த்தாமல் துவங்க வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,தமிழகத்தில் பா.ஜ.கவின் பினாமி ஆட்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.

முன்னதாக ஈரோட்டில் பேசிய திருநாவுக்கரசர், உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என உறுதியளித்தார். காவிரி மேலாண் ஆணையம் மூலம் தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைக்க முதல்வர் முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.